முகப்புடோலிவுட்

மெகா ஸ்டார் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா..?

  | May 21, 2020 23:41 IST
Chiru156

'சிரு156' என்பது மலையாள பிளாக்பஸ்டர் ‘லூசிஃபர்' படத்தின் ரீமேக் ஆகும்

இயக்குநர் சங்கரின் ‘பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதையடுத்து, தனது கியூட்டன முகபாவனைகளுடன் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவர் தமிழில் கடைசியாக விஜயுடன் இணைந்து 2011-ல் வெளியான வேலாயுதம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ல் பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களை விட்டுவிட்டார்.

இந்நிலையில், டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'சிரு156' படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெனிலியா அணுகப்பட்டதாக தற்பொது தகவல் வெளியாகியுள்ளது.

'சிரு156' என்பது மலையாள பிளாக்பஸ்டர் ‘லூசிஃபர்' படத்தின் ரீமேக் ஆகும், இதில் மோகன் லால் நடித்த பாத்திரத்தை சிரஞ்சீவி ஏற்று நடிக்கிறார். லூசிஃபர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த பாத்திரத்திற்காக தான் படக்குழு ஜெனிலியாவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தனது ஒப்புதலைக் கொடுக்கும் முனைப்பில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com