முகப்புடோலிவுட்

'இது ஒரு நல்ல முடிவு..' - இன்ஸ்டாவில் கால்பதித்த சிரஞ்சீவி

  | March 26, 2020 12:59 IST
Chiranjeevi

துனுக்குகள்

  • அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
  • மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்ஸ்டா பக்கத்தில் கணக்கை
  • அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சினிமா நட்சத்திரங்களும் அவர்களுடைய ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பரஸ்பரமாக பகிர்ந்துகொள்ளும் ஒரு இடம் தான் சமூக வலைத்தளங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கலந்துரையாடி வருகின்றனர். 

பல முன்னணி நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கும் நிலையில் அவர்களைப் போலவே உச்சத்தில் இருக்கும் அஜித் போன்ற சில நடிகர்கள் இந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை சமூக வலைத்தளங்களில் விருப்பம்காட்டதா தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி யுகாதி தினமான நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். தற்போது நிலவும் அசாதாரண நிலையில் ரசிகர்களுடன் இணைந்திருக்க விரும்புவதாகக் கூறிய அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்ஸ்டா பக்கத்தில் கணக்கை திறந்த ஒரே நாளில் சுமார் 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது முதல் பதிவாக கொரோனா குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்