முகப்புடோலிவுட்

"நான் மீண்டும் படப்பிடிப்பில்" : "A1 எக்ஸ்பிரஸ்" - பணியை துவக்கிய பிரபல நடிகர்..!

  | September 01, 2020 10:24 IST
A1 Express

துனுக்குகள்

 • Prasthanam என்ற தெலுங்கு படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு திரையுலக
 • இறுதியாக தமிழில் மாயவன் என்ற படத்தில் நடித்த இவர் இந்த 2020ம்
 • இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள சுந்தீப்,
Prasthanam என்ற தெலுங்கு படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு திரையுலக பிரவேசம் அடைந்தவர் தான் பிரபல நடிகர் சந்தீப் கிஷன். இவர் பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் நாயுடு அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் 2013ம் ஆண்டு வெளியான மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். 

இறுதியாக தமிழில் மாயவன் என்ற படத்தில் நடித்த இவர் இந்த 2020ம் ஆண்டு வெளியாக இருக்கும் நரகாசுரன் மற்றும் கசட தபர ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பூட்டுதல் காரணமாக இவருடைய A1 எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில் அந்த படக்குழு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள சுந்தீப், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படக்குழுவிற்கும் தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார். இன்று முதலே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com