முகப்புடோலிவுட்

“லவ் மட்டும் குறையவேயில்ல” 9-வது திருமண நாளை கொண்டாடும் அல்லு அர்ஜுன் - சினேகா..!

  | March 06, 2020 14:37 IST
Allu Arjun

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் சினேகாவிற்கும் திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிவிட்டன.

நடிகர் அல்லு அர்ஜுன் என்னதான் தெலுங்கு பட ஹீரோவாக இருந்தாலும், அவர் சென்னையில் படித்து வளர்ந்து, நம்ம ஊரு பையன் என்று தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அளவிற்கு நன்றாகத் தமிழ் பேசும் நடிகராவார்.

இதுவரை அவர் தமிழில் படம் நடித்ததில்லை. ஆனால், அவர் நடித்த அனைத்து தெலுங்கு படங்களுக்கும் இங்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக அவரின் அசாதாரணமான ஐக்கானிக் நடனத்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம்.

அவர் 2011-ஆம் ஆண்டு தெலங்கானா தொழிலதிபர் கன்சாரா சந்திரசேகர் ரெட்டியின் மகளான சினேகாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் அயான் எனும் ஆண் குழந்தையும், 3 வயதில் அர்ஹா எனும் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகள் மற்றும் அவர்களைப் பெற்ற இந்த காதல் ஜோடியின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியாகி வைரலாவது வழக்கம்.
இன்று இந்த தம்பதி தங்களது 9-வது திருமண நாளை கொண்டாடுகிறது. அந்த மகிழ்ச்சியில் இருக்கும் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு “கல்யாணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரம் மிக வேகமாக ஓடுகிறது, ஆனால், ஒவ்வொரு நாளும் காதல் மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். அதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகிறது.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘அல வைகுந்தபுரம்லோ' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. உலகம் முழுக்க இப்படம், குறிப்பாக இப்பாடல் கொண்டாடப்பட்டது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com