முகப்புடோலிவுட்

101M பார்வைகளைக் கடந்த ‘புட்ட பொம்மா’ வீடியோ பாடல்..! உலகளாவிய ஹிட்..!!

  | April 06, 2020 11:53 IST
Ala Vaikunthapurramuloo

இந்த வீடியோ பாடல் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அல வைகுந்தபுரமுலோ திரைப்படத்திலிருந்து ‘புட்ட பொம்மா' பாடலின் விடியோ 10 கோடி முறைக்கு மேலாகப் பார்க்கப்பட்டுவருகிறது.

த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து கடந்த ஜனவர் 12-ஆம் தெதி வெளியான தெலுங்கு திரைப்படம் ‘அல வைகுந்தபுரமுலோ'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடி வசூலித்து, வனிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்துக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்க, இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா' பாடல் குறித்து கேட்கவே வேண்டாம், உலகளாவிய ஹிட் என்று கூறலாம். 

இந்நிலையில், பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆடவைத்த ‘புட்ட பொம்மா' பாடலின் வீடியோ தற்போது, யூடியூபில் 101 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வீடியோ பாடல் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com