முகப்புடோலிவுட்

ஏர்போர்ட்டில் ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு ஆடிய Indigo பணியாளர்கள்.! அசந்துபோன அல்லு அர்ஜுன்..

  | July 21, 2020 23:17 IST
Butta Bomma

இப்போது இப்பாடலின் வீடியோ யூடியூபில் 280 மில்லியன் பார்வைகளைக் கடந்து இன்னும் வைரலாகிவருகிறது.

திரிவிக்ரம் ஶ்ரீரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான தெலுங்கு திரைப்படம் ‘அல வைகுந்தபுரமுலோ'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடி வசூலித்து, வனிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்துக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்க, இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா' பாடல் குறித்து கேட்கவே வேண்டாம், உலகளாவிய ஹிட் என்றே கூறலாம். இப்போது இப்பாடலின் வீடியோ யூடியூபில் 280 மில்லியன் பார்வைகளைக் கடந்து இன்னும் வைரலாகிவருகிறது.

இப்போது, விசாகப்பட்டினத்தை செர்ந்த Indigo விமான குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த ‘புட்ட பொம்மா' பாடலுக்கு ஆடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு மிகவும் வைரலானது.

அதோது அல்லு அர்ஜுனனின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் வீடியோவிற்கு கமண்ட் செய்து, அந்த வீடியோவில் உள்ள விமான ஊழியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் தந்து பதிவில் “இப்படிப்பட்ட இக்கட்டான காலங்களில் என்ன ஒரு ஆச்சரியம். நன்றி! உங்களது இந்த சைகைக்கு அடிபணிகிறேன்” என்று கூறிள்ளார்.

இந்த வீடியோ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரையும் ஈர்த்தது. அவர் டோலிவுட் திரைப்படங்கள் மற்றும் இசை மீது தனது அன்பை ஏராளமான டிக்டோக் வீடியோக்களின் மூலம் உருவாக்கியுள்ளார். அவரும் இந்த வீடியோவுக்கு “இது எவ்வளவு நல்லது. சிறந்த உற்சாகம் மற்றும் சிறந்த பாடல் புட்ட பொம்மா” எனக் கமண்ட் செய்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com