முகப்புடோலிவுட்

'அடிச்சுது பாரு யோகம்' - 'ஸ்டண்ட் ஹீரோவுக்கே' ஹீரோயின் ஆன அஞ்சலி..?'

  | February 27, 2020 14:20 IST
Anjali

அண்மையில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் நடித்ததற்காக ரசிகர்களின் பாராட்டுகளை பெருமளவில் பெற்றுள்ளார்

துனுக்குகள்

  • 'ஸ்டண்ட் ஹீரோவுக்கே' ஹீரோயின் ஆனா அஞ்சலி'
  • அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி
  • தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக உள்ள அஞ்சலி
அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி என்றாலும், இவர் நடித்த முதல் படம் சுந்தர் சி நடிப்பில் 2008ம் ஆண்டு வெளியான ஆயுதம் செய்வோம் தான். தூங்கா நகரம், கோ, எங்கேயும் எப்போதும் மற்றும் கற்றது தமிழ் ஆகிய படங்களில் நடித்துச் சிறந்த நடிகை என்ற பெயரோடு தற்போது அவர்  வலம்வருகிறார். ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக வலம்வந்த அஞ்சலி, அண்மையில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் நடித்ததற்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெருமளவில் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக உள்ள அஞ்சலி தற்போது தமிழில் காண்பது பொய், ஓ மற்றும் பிக் பாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டும் இல்லாமல் ஹிந்தியில் பிங்க் மற்றும் தமிழில் நேர்கொண்ட பார்வையாக வெளியான திரைப்படம் தற்போது தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் அஞ்சலி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள. இது ஒருபுறம் இருக்கத் தெலுங்கு திரையுலகைக் கலக்கி வரும் நடிகர் பால கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த படத்தில் நடிக்க ஏற்கனவே நயன்தாரா மற்றும் அனுஷ்காவை நாடியதாகவும், ஆனால், அவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் அஞ்சலியை நடிக்க வைக்கப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்