முகப்புடோலிவுட்

ராட்சசனுக்காக காத்திருக்கும் அனுபமா…?

  | April 17, 2019 15:44 IST
Anupama

துனுக்குகள்

  • ராட்சசன் படத்தை ராம் குமார் இயக்கி இருக்கிறார்
  • இந்த படத்தில் அமலாபால் நடித்திருந்தார்
  • இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஷ்வரன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். கொடி படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழில் வேறு வாய்ப்புகள் இன்னும் வரவில்லை. தெலுங்கில் அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ,' ‘உன்னடி ஒகடே சிந்தகி,' ‘ஹலோ குரு ப்ரேமா கோஸ்ரம்,' ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
 
தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்ற பெற்ற படம் “ராட்சசன்”. இந்த படத்தை ‘ராட்சஷகுடு' என்ற பெயரில்  தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த  படத்தில் அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்ககப்படுகிறது.
 
இந்த படம் வெளியான பிறகு அவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்