முகப்புடோலிவுட்

நட்புனா என்னனு தெரியுமா..? நம்ம அனுஷ்காவை கேளுங்க..!

  | March 26, 2020 12:51 IST
Friendship

தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தன்னுடைய வேலைக்காக பிரபாஸுடனான நட்பை விட்டுக்கொடுக்க முடியாது என்று அவர் கூறிய ஒரு வீடியோ ஆன்லைனில் பிரபலமாகிவருகிறது.

'பாகுபலி' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ள பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக பெரும்பாலான செய்திகளில் வந்துள்ளன. மேலும், அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகக் கூட வதந்திகள் வந்தன.

இப்போது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பிரபல தெலுங்கு டிவி சேனலில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனுஷ்காவிடன் "நீங்கள் பிரபாஸுடனான நட்பு அல்லது சினிமாவில் நடிப்பது, இந்த இரண்டில் எந்த விஷயத்தை நிறுத்துவீர்கள்..?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நிச்சயமாக சினிமாக்களில் நடிப்பதை” தான் விடுவேன். வேலைக்காக நட்பைப் விடமுடியாது என்று கூறியுள்ளார்.

அண்மையில் ஒரு நேர்காணலின் போது, அனுஷ்கா பிரபாஸுடனான தொடர்பு குறித்து பேசினார். அப்போது அவர் "நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபாஸை அறிந்திருக்கிறேன், அவர் எனது அதிகாலை 3 மணி நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். நாங்கள் இருவரும் திருமணமாகாததால், திரை ஒரு அற்புதமான ஜோடியாக தோற்றத்தை ஏற்படுத்துவதால், நாங்கள் படத்தில் வழக்கமாக இணைகிறோம். இருவருக்கும் இடையில் ஏதாவது இருந்திருந்தால், இந்நேரம் அது நடந்திருக்கும். நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான நபர்கள், நாங்கள் எந்த உணர்ச்சிகளையும் மறைக்காதவர்கள்" என்றார். இரண்டு நட்சத்திரங்களும் 'பில்லா', 'மிர்ச்சி' போன்ற படங்களிலும் நடித்துள்ளனர்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்