முகப்புடோலிவுட்

வரலாற்று நாயகி ஜான்சிராணி வேடத்தில் அனுஷ்கா!

  | July 05, 2019 20:56 IST
Sye Raa Narasimha Reddy

துனுக்குகள்

  • அமிதாப் பட்சன் இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்
  • ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார்
பாகுபலி, பாகமதி ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து, அனுஷ்கா தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.  மாதவனுடன் இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கி வரும் சைலண்ட் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இப்படத்தில்  கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார் கோனா வெங்கட்.
 
இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி' சரித்திர படத்திலும் அனுஷ்கா கவரவ தோற்றத்தில் வருகிறார்.
 
இந்த படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் அனுஷ்கா ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ஜான்சிராணி சம்பந்தமான சில காட்சிகள் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் இடம்பெறுகிறது என்றும், அந்த காட்சிகளில் அனுஷ்கா ஜான்சி ராணியாக வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்