முகப்புடோலிவுட்

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ அசத்தல் அப்டேட் : இணையும் பிரபல ஹாலிவுட் பட VFX சூப்பர்வைசர்.??

  | September 09, 2020 12:38 IST
Star Wars

இப்படத்தில் வில்லனாக, அதாவது கதைப்படி ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒப்பந்தமாகியுள்ளார்

ஆதிபுருஷ் என்ற தலைப்பில் வரவிருக்கும் மெகா திட்டத்தில் ‘பாகுபலி' நடிகர் பிரபாஸ் இராமாயணத்தில் வரும் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஓம் ரவுத் இயக்கவுள்ள இப்படத்தை பூஷன் குமார் தயாரித்து 5 மொழிகளில் வெளியிடவுள்ளார். பாகுபாலிக்குப் பிறகு பிரபாஸின் வாழ்க்கையில் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக ஆதிபுருஷ் அமையவுள்ளது. 3டி-யில் தயாரிக்கப்படும் இப்படம் ரூ. 500 கோடி பட்ஜட்டில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஓம் ரவுத் அண்மையில் அளித்த பேட்டியில், இப்படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை கற்றுக்கொள்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து சமீபத்தில், இப்படத்தில் வில்லனாக, அதாவது கதைப்படி ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக, அதாவது கதைப்படி சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திக்கும் நிலையில், இப்போது அடுத்த சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படம் இராமாயணம் எனும் புராண கதையை மய்யமாக கொண்டு பிரம்மாண்டமாக எடுகப்படவுள்ளதால், படத்துக்கு நிச்சயம் உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபக்ட்ஸ் பணிக்காக, ‘ஸ்டார் வார்ஸ்', ‘அவதார்' போன்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கு VFX செய்த குழுவின் சூப்பர்வைசர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியானதிலிருந்து பிரபாஸ் ரசிகர்கள் இதனைக் கொண்டாடிவருகின்றனர். ஆனால், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்புக்காக நாம் காத்திருக்கவேண்டியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com