முகப்புடோலிவுட்

ரூ. 4 கோடி நிதி அளித்த 'பாகுபலி' பிரபாஸ்..!!

  | March 28, 2020 08:47 IST
Prabhas

முன்னதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், ராம் சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரும் நன்கொடை அளித்திருந்தனர்.

‘பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக இன்று ரூ. 4 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதில் ரூ. 3 கோடி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ .50 லட்சம் நிதி கொடுத்துள்ளார்.

நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டேவுடன் ஜார்ஜியாவில் "பிரபாஸ் 20" படப்பிடிப்பிலிருந்து சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் பயணித்து வந்ததால் நடிகர்கள் இருவரும், அவரவர் வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைபிடித்துவருகின்றனர்.

முன்னதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், ராம் சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரும் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்க நன்கொடை அளித்திருந்தனர். பவன் கல்யாண் முதலில் ரூ. 2 கோடி கொடுத்தார். அதையடுத்து ராம் சரண் ரூ. 70 லட்சம் கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவின் மூத்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரூ. 1 கோடி கொடுத்தார். இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் ஒரு கோடியைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com