முகப்புடோலிவுட்

கொரோனாவிலிருந்து மீண்ட ‘பாகுபலி’ இசைமைப்பாளர் செய்த பாராட்டுதலுக்குறிய செயல்.!

  | September 21, 2020 23:39 IST
Mm Keeravaani

எம்.எம். கீரவாணி தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு இசையமைத்துவருகிறார்.

பிரபல இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி கோவிட் -19க்கு நேர்மறையாக பரிசோதித்து, அதிலிருந்து மீண்டு குணமும் அடந்தார் என்பதை இப்போது நாம் அனைவரும் அறிவோம். லேசான அறிகுறிகள் இருந்ததால் அவரது மகன் கால பைரவாவும் நேர்மறை சோதனை செய்ததாக அவர் அறிவித்திருந்தார்.

அவர்கள் இருவரும் பிளாஸ்மா தானம் பிரச்சாரங்களில் தீவிரமாக பங்கேற்றதுடன், இப்போது ‘ஆன்டிபாடிஸ்' எனும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்ட நிலையில், அவர்களின் பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகனுடன் இரண்டாவது முறையாக பிளாஸ்மாவை தானம் செய்ததாக அறிவித்தார்.

அவர்களின் பிளாஸ்மா தானத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்த இசையமைப்பாளர், அவர்களின் இரத்தத்தில் ஆன்டிபாடிகள் இன்னும் இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் பிளாஸ்மாவை தானம் செய்ய தகுதியுடையவர்கள் என்றும் கூறினார்.

பிரபாஸின் 'பாகுபலி' தொடர் படங்களுக்கு இசையமைத்துள்ள எம்.எம். கீரவாணி தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு இசையமைத்துவருகிறார். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com