முகப்புடோலிவுட்

காதலியை அறிமுகப்படுத்திய ‘பாகுபலி’ நடிகர்.!! பிரபலங்கள் வாழ்த்து..!

  | May 13, 2020 00:08 IST
Rana Daggubati

ராணாவுக்கு சிரஞ்சீவி உட்பட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

‘பாகுபலி' மூலம் இந்திய இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் ராணா டகுபதி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று தனது காதலி மிஹீகா பஜாஜின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தன்னையும் அவரது வருங்கால மனைவியையும் சிரிக்கும் புன்னகைக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர் “அவள் யெஸ் சொல்லிட்டாள்” என பதிவிட்டுள்ளார்.

And she said Yes :) ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

மிஹீகா பஜாஜ் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆவார். இப்போது எல்லாம் அதிகாரப்பூர்வமாகிவிட்டதால், இருவர் குடும்பங்களும் பூட்டுதல் நீக்கப்பட்டவுடன் திருமணம் குறித்து திட்டமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணா இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டவுடன், நடிகை சமந்தா, ஸ்ருதி ஹாசன், தமன்னா, ஹன்ஷிகா மோத்வானி, காஜல் அகர்வால், நடிகர் அல்லு சிரிஷ், விக்ரம் பிரபு, ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பல பிரபலங்கள் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராணா தகுபதி எப்போதுமே பல மொழிகளில் திரைப்படங்களில் பிஸியான நடிகராக இருந்து வருகிறார். ‘பாகுபலி' வெற்றிக்குப் பிறகு பல பான்-இந்தியா திரைப்படங்களை செய்து வருகிறார். ‘காடன்' வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர் தற்போது, தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமான ‘மடை திறந்து / 1945', மற்றும் ஹிரன்ய கஷ்யபா மற்றும் விராட பர்வம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com