முகப்புடோலிவுட்

ரூ. 75 லட்சம் மதிப்புள்ள காரை பயிற்சியாளருக்கு பரிசளித்த ‘பாகுபலி’.!!

  | September 08, 2020 12:24 IST
Radhe Shyam

பிரபாஸ் தனது பைப் லைனில் ராதா கிருஷ்ணகுமாரின் ‘ராதே ஷியாம்’ மற்றும் ஓம் ரவுத்தின் ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார்.

‘பாகுபலி' புகழ் நடிகர் பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருடனும் அவரது குடும்பத்தினருடனும் எடுத்துகொண்ட புகைப்படம் ஆன்லைனில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்து வருகிறது. புகைப்படத்தில், பிரபாஸ் தனது பயிற்சியாளரான லக்ஷ்மன் ரெட்டி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரின் அருகில் நிற்பதைக் காணலாம், இதன் பின்னணியில் ஒரு சொகுசு காரையும் காணலாம்.

இந்த புகைப்படம் வைரலானதற்கு காரணம், அவர் தனது ப்யிற்சியாளர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பதால் மட்டுமல்ல, அவர்களுக்கு பின்னால் இருக்கும் அந்த கார் தான் மிக முக்கியமானது. காரணம், அந்த ‘Rang Rover' கார், பிரபாஸ் தனது பயிற்சியாளருக்கு அன்பின் அடையாளமாக பரிசளித்தாகும். அந்த காரின் விலை மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவரும் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகிறது. படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் லக்ஷ்மனின் ஆலோசனையையும் பயிற்சியையும் எடுக்கத் தவறியதில்லை. பாகுபலி திரைப்படங்களை தயாரிக்கும் போது ஜிம் பயிற்சியாளர் பெரிதும் உதவினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பணி முன்னணியில், பிரபாஸ் தனது பைப் லைனில் ராதா கிருஷ்ணகுமாரின் ‘ராதே ஷியாம்' மற்றும் ஓம் ரவுத்தின் ‘ஆதிபுருஷ்' உள்ளிட்ட படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com