முகப்புடோலிவுட்

நடிகை ஷிவானியுடன் புதிய திரைப்படமா..? உண்மையை உடைத்த முகேன் ராவ்.!

  | September 01, 2020 12:35 IST
Mugen Rao

"எனது திரைப்படங்கள் மற்றும் திட்டங்களை நான் உங்களுக்கு நேராக புதுப்பிப்பேன்” என்று கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் - 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை தட்டிச்சென்ற மலேசிய தமிழர் முகேன் ராவ். அவர் இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே, பல தமிழ் ஆல்பம் பாடல்களைப் பாடி நடித்துள்ளார். இந்நிகச்சிக்குப் பிறகு அவரின் புகழ் உலகெங்கும் பறவியது. அவருக்கு கோடிக்கணக்கான இளம் ரசிகர்கள் தற்போது உள்ளனர். அவரின் ஆல்பம் பாடல்களும் பலரின் விருப்பப் பாடலாக உள்ளன.

முகன் ராவ் டிவி நடிகை ஷிவானி நாராயணனுடன் ஜோடியாக புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. ‘பகல் நிலவு' எனும் பிரபல தொலைகாட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றவர் ஷிவானி நாநராயணன். மேலும் தனது தினசரி புதுப்பிப்புகளுடன் இன்ஸ்டாகிராம் பரபரப்பை ஏற்படுத்திவருவதும், ஹாட்டான போட்டோஷூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துவருகிறார்.

இப்போது முகன் தானே இந்த படம் குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த செய்தி உண்மை இல்லை என்று கூறியுள்ளார். அவர் “FAKE NEWS. எனது திரைப்படங்கள் மற்றும் திட்டங்களை நான் உங்களுக்கு நேராக புதுப்பிப்பேன்” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com