முகப்புடோலிவுட்

விஜய் தேவரகொண்டாவின் தம்பியுடன் இணையும் 'பிகில்' நடிகை.!

  | July 11, 2020 12:18 IST
Anand Devarakonda

ஆனந்த தேவரகொண்டா ‘தொரசானி’ எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக விஜய்யின் ‘பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் வர்ஷா பொல்லம்மா. 2015-ஆம் ஆண்டில் சதுரன் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் வெற்றிவேல், 96, சீமைதுரை, கல்யாணம் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், அவர் தெலுங்கில் இந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வெளியான ‘சூஸி சூடாங்கானே' எனும் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அதையடுத்து, விஜய் சேதுபதியின் '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு' படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடித்து தெலுங்கிலும் பிரபலமாக உள்ளார்.

இப்போது, விஜய் தேவரகொண்டாவின் சமோதரரான ஆனந்த் தேவரகொண்டாவுன் புதிய திரைப்படத்துக்காக இணைந்துள்ளார் வர்ஷா. இந்த ரொமாண்டிக் காதல் திரைப்படத்துக்கு ‘மிடில் கிளாஸ் மெலோடீஸ்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

loi3kkmo

இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் அனந்தோஜு இயக்க, பவ்யா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுவிட்டதாம்.

ஆனந்த தேவரகொண்டா ‘தொரசானி' எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com