முகப்புடோலிவுட்

ஆதிபுருஷ் அப்டேட்: பிரபாஸுக்கு வில்லனாகும் சைஃப் அலி கான்.!

  | September 03, 2020 17:30 IST
Adipurush

இதற்கிடையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக, அதாவது கதைப்படி சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆதிபுருஷ் என்ற தலைப்பில் வரவிருக்கும் மெகா திட்டத்தில் ‘பாகுபலி' நடிகர் பிரபாஸ் இராமாயணத்தில் வரும் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபாஸ் வெளியிட்டதிலிருந்து இந்த படம் சினிமா வட்டாரங்கள் அனைத்திலும் இதே பேச்சு தான். ஓம் ரவுத் இயக்கவுள்ள இப்படத்தை பூஷன் குமார் தயாரித்து 5 மொழிகளில் வெளியிடவுள்ளார்.

பாகுபாலிக்குப் பிறகு பிரபாஸின் வாழ்க்கையில் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக ஆதிபுருஷ் அமையவுள்ளது. 3டி-யில் தயாரிக்கப்படும் இப்படம் ரூ. 500 கோடி பட்ஜட்டில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் இப்படத்துக்கான அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில், இயக்குநர் ஓம் ரவுத் அண்மையில் அளித்த பேட்டியில், இப்படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை கற்றுக்கொள்வதாக கூறினார்.

இப்போது, இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக, அதாவது கதைப்படி ராவணனாக நடிக்க பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒப்பந்தாகியுள்ளார். இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் ஓம் ரவுத் மற்றும் கதாநாயகன் பிரபாஸ் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் இருவருமே ஒரு போஸ்டரை பகிர்ந்ததோடு “7000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக புத்திசாலித்தனமான அரக்கன் இருந்தான்!” என எழுதியுள்ளனர்.

இதற்கிடையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக, அதாவது கதைப்படி சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இல்லை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com