முகப்புடோலிவுட்

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்.!

  | September 10, 2020 16:57 IST
Sarkaru Vaari Paata

மகேஷ் பாபுவின் பிறந்த நாளில், தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

டோலிவுட் : மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா' பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளை அறிய ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கும் இந்த ஒரு நேரத்தில், இந்த படத்தில் முக்கிய வில்லன் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் புதிய திரைப்படம் ‘சர்காரு வாரி பாட்டா'. இப்படத்தில் எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் பாபு மற்றும் இசையமைப்பாளர் தமன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கான மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், கீர்த்தி சுரேஷ் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் காணப்படுவார் என்று வதந்திகள் உள்ளன.

5lmbfub8

மகேஷ் பாபுவின் பிறந்த நாளில், தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

m5tio9uo

இப்போது, இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அணில் கபூரை முக்கிய வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக புதிய அறிக்கை வந்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் எந்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இந்த செய்தி இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, ஏனெனில் இந்த செய்தி பிரபாஸின் ‘ஆதிபுருஷ்' தயாரிப்பாளர்கள் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்த சில நாட்களில் வெளிவந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com