முகப்புடோலிவுட்

Jr. NTR-ன் 6 பேக்ஸ் உடலை பார்த்து Gay-ஆக மாற விரும்பிய சர்ச்சை இயக்குநர்.!

  | May 21, 2020 13:33 IST
Junior Ntr

"மியா மல்கோவயை அடுத்து நான் பார்த்த மிகச் சிறந்த உடல்"

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் சக நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை ட்வீட் செய்து, புகைப்படம் வெளியிட்டு, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் போட்டு சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர்.

ஜூனியர் என்.டி.ஆரின் 6 பேக்ஸை வெளிப்படுத்தும் புகைப்படத்தை பிரபல புகைப்படக் கலைஞர் டப்பூ ரத்னானியால் நேற்று வெளியிடப்பட்டது, ராஜமௌலியின் ‘RRR' குழுவிடமிருந்து எந்த போஸ்டரும் வீடியோவும் வெளியிடப்படாது என்று அறிவித்ததை அடுத்து ஏமாற்றத்திலிருந்த ரசிகர்களுக்கு, இந்த சிக்ஸ் பேக்ஸ் புகைப்படம் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த புகைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் புகைப்படத்திற்கு தனது ஸ்டைலில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். என்.டி.ஆர் சிறந்த உடலைக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்த அவர், “வாவ் இது மியா மல்கோவயை அடுத்து நான் பார்த்த மிகச் சிறந்த உடல்" என்றும் “ஹே தாரக், நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் அல்ல என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் இந்த படத்தில் உங்களைப் பார்த்த பிறகு நானும் ஒருவராக மாற விரும்புகிறேன்” கூறினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com