முகப்புடோலிவுட்

ரசிகர்களுக்காக படம் பண்ணுவேன், விமர்சகர்களுக்கு இதில் வேலை இல்லை - விஜய் தேவரகொண்டா

  | September 05, 2020 23:44 IST
Vijay Devarakonda

‘World Famous Love’ திரைப்படத்தில் கடைசியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விஜய் இப்போது, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2011-ஆம் ஆண்டு Nuvilla என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம்வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. Pelli Choopulu, dwaraka போன்ற படங்களில் நடித்த தேவரகொண்டா கடந்த 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிய அளவில் பாராட்டப்பட்டார்.

அன்று முதல் இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் உருவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தெவரகொண்டா என்பதை விட அர்ஜுன் ரெட்டி என்றால் மட்டுமே ஒரு சிலருக்கும் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியான ‘World Famous Love' திரைப்படத்தில் கடைசியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்போது, இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுவரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா பிரபல ஆன்லைன் போர்டலுக்கு ஆளித்த பேட்டியில், தான் பார்வையாளர்களுக்காக மட்டுமே சினிமா செய்ய விரும்புவதாகவும், அதில் விமர்சகர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

"விமர்சகர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு படம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த இடைத்தரகர்களை நான் சமன்பாட்டிலிருந்து நீக்குவது போலாகும்... இது எனக்கும் எனது பார்வையாளர்களுக்கும் இடையில் உள்ளது... ஒரு ஸ்டார் அல்லது ஐந்து ஸ்டார் பெருவதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடிய நல்ல படங்களைக் கொடுப்பேன், அந்த தரத்திற்கு நான் உத்தரவாதம் தருவேன்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் தேவரகொண்டாவைப் பாராட்டிவருகின்றனர்.     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com