முகப்புடோலிவுட்

‘மெகா ஸ்டார்’ பிறந்தநாளில் வெளியாகும் ‘Mega Rap’ சிறப்பு பாடல்.!

  | August 04, 2020 15:57 IST
Mega Star Chiranjeevi

சிரஞ்சீவி ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் ஒருவர். அப்படி இருக்கையில் அவரது பிறந்தநாளை திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் எந்த அலவிற்கு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பது சொல்லவேண்டியது இல்லை.

இந்த முறை அவரது பிறந்தநாள் இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் கொண்டாடப்படவுள்ள நிலை இருந்தாலும், சிறப்பான முறையில் கொண்டாட புதிய மற்றும் தனித்துவமான வழிகளைக் கொண்டு வருவது ஆச்சரியமல்ல.

ராஷ்டிர ராம் சரண் யுவ சக்தி என்ற ரசிகர் மன்றம், சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு ராப் பாடலை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பாடலுக்கு ‘மெகா ராப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியிடப்படும் பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களிடமிருந்து இந்த அறிவிப்பு கணிசமான உற்சாகத்தை சந்தித்துள்ளது. அதே ரசிகர் மன்றம் சிரஞ்சீவியின் மகன் மற்றும் நடிகர் ராம் சரனின் பிறந்தநாளுக்காக ஒரு பாடலையும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘மெகா ராப்' பாடல் ஃப்ரீக் மேசனின் இசையில், ராப்பர் ஸ்கார்பியன் பாடவுள்ளார். இந்த பாடல் நிகில் கான்செப்ட்ஸ் உருவாக்கிய வீடியோவுடன் வருகிறது.

சமூக தொலைதூர விதிமுறைகள் பராமரிக்கப்பட வேண்டிய மற்றும் பெரிய கூட்டங்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் சிரஞ்சீவியை கவுரவிப்பதற்கான சிறந்த வழியாக இது தெரிகிறது. மெகா ஸ்டாருக்கு அவரது மற்ற ரசிகர்களுக்கு இப்பாடல் மகிழ்ச்சியை தரும் என நம்பப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com