முகப்புடோலிவுட்

சாதனைகளை அடுக்கும் 'புட்ட பொம்மா' - மகிழ்ச்சில் தமன் போட்ட ட்வீட்..!

  | August 02, 2020 08:10 IST
Thaman

துனுக்குகள்

 • இப்படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்க, இப்படத்தின் பாடல்கள்
 • இந்நிலையில், பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி
 • 300 மில்லியன் என்ற அளவை விரைவில் தொட்ட முதல் தெலுங்கு பாடல் இதுவே என்று
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியான தெலுங்கு திரைப்படம் தான் ‘அல வைகுந்தபுரமுலோ'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடி வசூலித்து, வனிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்க, இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா' பாடல் குறித்து கேட்கவே வேண்டாம், உலகளாவிய ஹிட் என்றே கூறலாம். உள்ளூர் பிரபலங்கள் முதல் வார்னர் போன்ற வெளிநாட்டு பிரபலங்கள் வரை இந்த பாடல் பிரபலம். 

இந்நிலையில், பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆடவைத்த ‘புட்ட பொம்மா' பாடலின் வீடியோ தற்போது, யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வீடியோ பாடல் கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 300 மில்லியன் என்ற அளவை விரைவில் தொட்ட முதல் தெலுங்கு பாடல் இதுவே என்று இசையமைப்பாளர் தமன் குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com