முகப்புடோலிவுட்

விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து! காவல்துறை விசாரணை?

  | May 04, 2019 19:29 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • ராம்சரண் தயாரிக்கும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி.
 • சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார்கள்
 • நயன்தாரா, தமன்னா இப்படத்தில் நடிக்கிறார்கள்
சிரஞ்சீவியின் மகன் தெலுங்கு திரைப்பட நடிகருமான ராம்சரண் தயாரிக்கும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, சுதீப் என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது இப்படம்.
 
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்கா பேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணை தோட்டம் இருக்கிறது.
 
இந்த தோட்டத்திலேயே பிரமாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு அதில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.
 
சிரஞ்சீவி திரும்பியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. நேற்று காலை திடீர் என்று படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com