முகப்புடோலிவுட்

"இது பிறந்தநாள் பரிசு" - மோஷன் போஸ்டர் வெளியிட்ட "Sarkaru Vaari Paata" படக்குழு..!

  | August 09, 2020 10:37 IST
Hbd Mb

துனுக்குகள்

 • நடிப்பு மட்டும் இன்றி சிறந்த குணத்தாலும் மக்களை கவர்ந்தவர் மகேஷ் பாபு
 • தனது தந்தையின் பிறந்த நாளன்று ஒரு அதிரடி அறிவிப்பை விருந்தாக வைத்தார்
 • பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்
முதலில் தந்தை கிருஷ்ணாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பின்பு ஹீரோவாக என சினிமாதான் மகேஷுக்கான களம் என்று ஆரம்ப காலத்திலேயே திட்டமிடப்பட்டது தான். ஆனால், அவரின் ஆரம்பக்கால படங்கள் அப்படி இப்படி ரகம்தான். "அந்த சமயத்தில் எல்லாம், என் அப்பாவுக்காக என்ன மக்கள் சப்போர்ட் பண்ணினாங்களே தவிர. அதெல்லாம் அவ்வளவு நல்ல படங்கள் கிடையாது" என அவரே ஒப்புக் கொள்வார்.

காலங்கள் நகர்ந்தன, மகேஷ் பாபு என்ற நடிகர் மாபெரும் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார். தமிழில் வெளியான ஸ்பைடர் மட்டுமே இவர் தமிழிலும் நடித்த படம் என்றபோது இவருக்கு தமிழும் ரசிகர் கூட்டம் அதிகம். முறையான நடிப்பு மட்டும் இன்றி சிறந்த குணத்தாலும் மக்களை கவர்ந்தவர் மகேஷ் பாபு. இறுதியாக இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை பெட்ரா படம் தான் Sarileru Neekevvaru. இந்த படத்திற்கு இவர் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருடைய அடுத்த பட அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தனது தந்தையின் பிறந்த நாளன்று ஒரு அதிரடி அறிவிப்பை விருந்தாக வைத்தார் மகேஷ் பாபு. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை படு குஷியில் ஆழ்த்தியுள்ளார். "Sarkaru Vaari Patta" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் படக்குழுவினர் இன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com