முகப்புடோலிவுட்

"கடின உழைப்புக்கு பலன் உண்டு" - ராஜமௌலிக்கு புகழாரம் சூட்டிய "கால பைரவன்"..!

  | August 01, 2020 08:35 IST
11 Years Of Magadheera

துனுக்குகள்

 • Chirutha என்ற படத்தின் மூலம் 2007ம் ஆண்டு இவர் தெலுங்கு திரையுலகில்
 • தெலுங்கு திரையுலகிலும் ராம் சரணின் திரையுலக வாழ்க்கையிலும் மிகவும்
 • இந்நிலையில் நேற்று மகதீரா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை
மிக பெரிய நடிகரின் மகன் என்றபோது படிப்படியாக திரையுலகில் களமிறங்கி சாதிக்க ஆரமித்த ஒரு நடிகர் தான் ராம் சரண். Chirutha என்ற படத்தின் மூலம் 2007ம் ஆண்டு இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற இவருக்கு அடுத்ததாக 2009ம் ஆண்டு அமைந்த திரைப்படம் தான் இவர் திரையுலக வாழக்கையை புரட்டிப்போட்ட திரைப்படம் என்று கூறலாம். 2009ம் ஆண்டு பிரபல இயக்குநர் ராஜ மௌலி இயக்கத்தில் உருவானது தான் "மகதீரா" என்ற என்ற திரைப்படம்.

தெலுங்கு திரையுலகிலும் ராம் சரணின் திரையுலக வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான திரைப்படமாக அப்படம் அமைந்தது. மாவீரன் என்ற பெயரில் அந்த படம் தமிழிலும் வெளியாகி ராம் சரண் தமிழ் ரசிகர்கள் நெஞ்சையும் கவர்ந்தார் என்றால் அது மிகையல்ல. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற படத்தில் அவர் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் நேற்று மகதீரா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நடிகர் ராம் சரண் ஒரு காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு என்பதை எனக்கு நிரூபித்தவர் ராஜ மௌலி என்று கூறி அவருக்கு புகழாரம்  சூட்டியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com