முகப்புடோலிவுட்

'ராம் கோபால் வர்மாவின் த்ரில்லர்' - இயக்குநர் வெளியிட்ட First Look..!!

  | July 26, 2020 10:16 IST
Thriller

துனுக்குகள்

 • இயக்குநர் ராம் கோபால் வர்மாவை தொடர்ந்து படங்களை இயக்கி
 • கடந்த 2 மாதங்களில், க்ளைமேக்ஸ், கொரோனா வைரஸ், நேகட் நங்கா நாக்னம்
 • இயக்குநர் ராம் கோபல் வர்மா தனது அடுத்த திட்டமான ‘த்ரில்லர்' எனும் புதிய
உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லா நாடுகளிலும் பொழுதுபோக்குத் தொழில்கள் இயங்கமுடியாமல் முடங்கிக் கிடக்கிறது. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், மல்டிபிளக்ஸ்கள் இயங்கும், மக்கள் எப்போது இயல்பு நிலையிக்கு வருவார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர். ஆனாலும், இவை எதுவும் சர்ச்சையின் செல்ல மகன் என்று அழைக்கப்படும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை தொடர்ந்து படங்களை இயக்கி வெளியிடுவதிலிருந்து தடுக்க முடியவில்லை.

கடந்த 2 மாதங்களில், க்ளைமேக்ஸ், கொரோனா வைரஸ், நேகட் நங்கா நாக்னம், 12 ‘O' Clock, கிட்னாப்பிங் ஆஃப் கத்ரீனா கைஃப், தி மேன் ஹூ கில்டு காந்தி, மர்டர் என ஏகப்பட்ட படங்களை அறிவித்து, படபிடிப்புக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் இந்த ஸ்மார்ட் இயக்குநர்.

இந்நிலையில், இயக்குநர் ராம் கோபல் வர்மா தனது அடுத்த திட்டமான ‘த்ரில்லர்' எனும் புதிய படத்தை குறித்து அண்மையில் அறிவித்தார். மேலும் அந்த படத்தின் நாயகியின் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அந்த 'த்ரில்லர்' படத்தின் First Look போஸ்ட்டரை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com