முகப்புடோலிவுட்

ஷ்ரத்தா ஶ்ரீநாத்தின் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்.!

  | June 30, 2020 17:05 IST
Krishna And His Leela

இதில் ஹீரோவின் கதாபாத்திரம் பல காதல் விவகாரங்களைக் கொண்டுள்ளது, அவை இந்து மதத்திற்கு எதிரானவை என்று கருதப்படுகின்றன.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், 2005ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கோகினூர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு பிரவேசித்தார். தனது இரண்டாவது படமாக இவர் கன்னடத்தில் நடித்த U turn என்ற திரைப்படம் இவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுத்து.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் ‘காற்று வெளியிடை' படத்தில் கேமியோ ரோலில் நடித்த அவர், கவுதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படத்தின் மூலம் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து விக்ரம் வேதா, ரிச்சி மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற தரமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சமீபத்திய தெலுங்கு திரைப்படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா' கடந்த வாரம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இதில் ஹீரோவின் பெயர் கிருஷ்ணா என்றும் ஹீரோயின்களில் ஒருவருக்கு ராதா என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்து அமைப்புகளும், நெட்டிசன்களும் கோபமடைந்துள்ளனர். மேலும், இதில் ஹீரோவின் கதாபாத்திரம் பல காதல் விவகாரங்களைக் கொண்டுள்ளது, அவை இந்து மதத்திற்கு எதிரானவை என்று கருதப்படுகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com