முகப்புடோலிவுட்

அல்லு அர்ஜுனுடன் த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.!! #3YearsForDJ

  | June 24, 2020 18:47 IST
Allu Arjun

இவர்கள் நடித்த 'துவ்வடா ஜெகநாதம்' வெளியாகி நேற்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தது.

டோலிவுட் : தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பெருமைக்கு சொந்தமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். வளர்ந்துவரும் இளம் ஹீரோவன அவர் தனது இயல்பான நடிப்பாலும், அசாத்தியமான நடனத்தாலும் தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்திய சினிமா துறையில் தனித்து தெரியக்கூடிய பிரபலமாக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது சினிமா பயணம், தற்போது ஹீரோவாக தனது 20-வது திரைப்படமான ‘புஷ்பா'வில் நடித்துவருகிறார்.

இப்போது, அவருடன் கடைசியாக ‘அல வைகுந்தபுரமுலோ' திரைப்படத்தில் இணைந்து நடித்த இளம் நடிகை பூஜா ஹெக்டே, அல்லுவுடன் தான் முதல் முதலாக பணியாற்றியபோது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்று த்ரோபேக் செய்துள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் முதல்முறையாக DJ என்று அழைக்கப்படும் ‘துவ்வடாஜெகநாதம்' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 2017ல் வெளியான இப்படம் தெலுங்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வெளியாகி நேற்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கவர்ச்சியான நட்சத்திரம் பூஜா ஹெக்டே, ஷூட்டிங் ஸ்பாட்டில் அல்லு அர்ஜுன் விபூதியுடன் சாமிராக தோற்றமளிக்கும் புகைப்படத்தையும், தன்னை மிஸ் DJவாக மாற்ற, தனக்கு விபூதி பூசிய அல்லுவை ‘விபூதி ப்ரோ' எனக் குறிப்பிட்டு மற்றொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது.

அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் தான், இவர்கள் மீண்டும் திரிவிக்ரமின் பிளாக்பஸ்டர் ஹிட் ‘அல வைகுந்தபுர்முலோ'வில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com