முகப்புடோலிவுட்

'உங்கள் அன்புக்கு நான் தரும் பரிசு' - பிறந்தநாளன்று ட்ரைலரை வெளியிட்ட நரேஷ்..!!

  | June 30, 2020 13:06 IST
Allari Naresh

துனுக்குகள்

  • 'அல்லரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2002ம் ஆண்டு திரையுலகில்
  • இதுவரை 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது நந்தி என்ற
  • பலரும் எதிர்பார்த்த தனது நந்தி திரைப்படத்தின் ட்ரைலரை
'அல்லரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2002ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் நரேஷ். பலர் இவரை Allari நரேஷ் என்றே அழைப்பர். தமிழில் 2003ம் ஆண்டு வெளியான குறும்பு மற்றும் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடித்துள்ளார் என்றபோது இவருடைய நடிப்பிற்கு குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையல்ல. 

இதுவரை 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது நந்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தடைபட்டுள்ள படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை மக்கள் செல்வி வரலட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது தன்னுடைய பிறந்தநாளுக்கு surprise கொடுக்கும் ரசிகர்களுக்காக இந்த முறை அவர் தனது பிறந்தநாளான இன்று ஒரு surprise கொடுத்துள்ளார். பலரும் எதிர்பார்த்த தனது நந்தி திரைப்படத்தின் ட்ரைலரை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com