முகப்புடோலிவுட்

'நான் ஒரு கோடி தருகிறேன்' - பிரதமரை பாராட்டிய பவன் கல்யாண்

  | March 26, 2020 13:01 IST
Pawan Kalyan

துனுக்குகள்

  • அதனால் கண்டிப்பாக இந்தியா இந்த நோயில் இருந்து
  • மக்கள் தனிமை படுத்திக்கொண்டாள் மட்டும் தவிர்க்க முடியாது
  • கொரோனாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி தற்போது உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் தொடர்ந்து பரவி இந்த நோயினை மக்கள் தனிமை படுத்திக்கொண்டாள் மட்டும் தவிர்க்க முடியாது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைச்சகத்தின் தலைவர் ஒரு புதிய அச்சுறுத்தும் தகவலை தற்போது கூறியுள்ளார். 

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயை தடுக்க திண்டாடி வரும் நிலையில் இந்தியா இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற அச்சம் மக்களிடையே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால் இதை விட பெரிய அளவிலான நோய்களை இந்தியா சமாளித்துள்ளது அதனால் கண்டிப்பாக இந்தியா இந்த நோயில் இருந்து மீண்டு வரும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த கொரோனவை எதிர்த்து போராட திரைப்பிரபலன்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார், "அதில் கொரோனவை எதிர்த்து போராட பிரதமரின் நிவாரண நிதிக்கு தான் 1 கோடி ரூபாய் தருவதாக" அவர் தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்