முகப்புடோலிவுட்

'நான் அவரை பின்பற்றினேன்' - அரசுக்கு 70 லட்சம் தந்த ராம் சரண்

  | March 27, 2020 11:57 IST
Pawan Kalyan

துனுக்குகள்

  • இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கடிதம்
  • நடிகர் பவன் கல்யாண் அவர்களை பின்பற்றி தானும் ரூபாய் 70 லட்சத்தை
  • இந்த நோயை எதிர்த்து போராட இந்திய அரசுக்கு
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி தற்போது உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் தொடர்ந்து பரவி இந்த நோயினை மக்கள் தனிமைப் படுத்திக்கொண்டாள் மட்டும் தவிர்க்க முடியாது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைச்சகத்தின் தலைவர் ஒரு புதிய அச்சுறுத்தும் தகவலை தற்போது கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த நோயை எதிர்த்துப் போராட இந்திய அரசுக்கு பல பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஒரு கோடி ரூபாய் கொடுத்த நிலையில் தானும் அவரை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க 70 லட்சம் ரூபாயை இந்தியாவிற்குத் தருவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த கடிதத்தில் நடிகர் பவன் கல்யாண் அவர்களைப் பின்பற்றி தானும் ரூபாய் 70 லட்சத்தை தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசுக்கு வழங்குவதாக அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்