முகப்புடோலிவுட்

பிரபாஸ் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடும் பாலிவுட் நடிகை?

  | July 16, 2019 14:15 IST
Saaho

துனுக்குகள்

 • இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது.
 • சாஹோ படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
 • இப்படத்தை ஆகஸ்ட் 15ம் நாள் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது
பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் சுஜீத் இயக்கும் ‘சாஹோ'என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்க இவர்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் குத்து பாடல் ஒன்று படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பாலிவுட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் சல்மான் கான் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஜாக்குலின், சாஹோவில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.  விரைவில் படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com