முகப்புடோலிவுட்

ராஜமௌலியின் RRR அப்டேட் : ஜுனியர் என்.டி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் கம்மிங்.?

  | May 18, 2020 13:04 IST
Rrr

அநேகமாக RRR திரைப்படம் 2021 ஜூலை மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. 'RRR' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில் இரத்தம், ரணம் மற்றும் ரௌத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பான் இந்தியா திரைப்படமாக பன்மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ராம் சரண் பிறந்த நாள் பரிசாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இந்த படத்தில் இருந்து ராம் சரனுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது ‘இரத்தம், ரணம் & ரௌத்திரம்' படத்தின் மற்றொரு ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆரின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மே 20-ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த செய்தி இணையம் முழுவதும் வைரலாகியுள்ளது மற்றும் நடிகரின் ரசிகர்கள் அதை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த படம் வருகின்ற 2021 ஜனவரியில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்தது. பிறகு, கொரோனா அச்சம் காரணமாக இந்த படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், அநேகமாக 2021 ஜூலை மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com