முகப்புடோலிவுட்

“கே.ஜி.எஃப் 2” படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

  | August 30, 2019 17:22 IST
Kgf

துனுக்குகள்

 • பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்
 • கோலார் தங்க வயல் பகுதியில் படப்பிடிப்புக்கு செட் அமைக்கப்பட்டது
 • தற்போது நீதிமன்றம் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளது
யாஷ் நடித்துவரும் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
தெலுங்கு நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘கே.ஜி.எஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டது. தமிழ் நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமார் 100 கோடி வசூல் சாதனைப்படைத்து.
 
20s8q0o8

இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கபபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com