முகப்புடோலிவுட்

கீர்த்தி சுரேஷின் ‘ரங் தே’ டீஸர் நாளை வெளியீடு.!

  | July 25, 2020 23:39 IST
Rang De

ரங் தே போஸ்டருக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டீஸருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான ‘ரங் தே' பட டீஸர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘பென்குயின்' திரைப்படத்தில் காணப்பட்டார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு நேர்மறையான கருத்துக்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. இப்போது, ரஜினியின் ‘அண்ணாத்த' படத்தில் நடித்துவரும் கீர்த்தி, மேலும் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', மிஸ் இந்தியா, குட் லக் சகி, ரங் தே ஆகிய படங்களையும் வரிசையாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ‘ரங் தே' படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அப்படத்தின் ஹீரோவான நித்தினுக்கு திருமண பரிசாக நாளை இப்படத்தின் அதிகாரப்பூரவ டீஸர் வெளியீட்டை அறிவித்துள்ளார் கீர்த்தி.

ரங் தே போஸ்டருக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டீஸருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com