முகப்புடோலிவுட்

கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’ படப்பிடிப்பு நிறைவு!!

  | September 11, 2020 15:14 IST
Keerthy Suresh

இப்படம் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக இயக்குநர் நாகேஷ் குக்குனூரின் படமான ‘குட் லக் சகி' என்ற படத்தில் காணப்படுகிறார். இப்படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கடந்த மாதம், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரசியமான டீஸர் வெளியாகி செம வைரலானது. தில் ராஜு வழங்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதல் அட்டவணை கடந்த ஆண்டு ஏப்ரல் 2019-இல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பின் முக்கிய பகுதி விகராபாத் மற்றும் புனேவில் நடந்தது.

இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷ்ரவ்யா வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு குழு புகைப்படத்துடன் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்போது, இந்த ட்வீட்டை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் “படப்பிடிப்பு முடிந்தது! இந்த அருமையான அணிக்கு மிக்க நன்றி! உங்கள் அனைவருடனும் பணியாற்றியதி மிக்க மகிழ்ச்சி… இப்போதும் எப்போதும் எனக்கு ஒரு பகுதியாக சகி இருப்பாள!” என்று பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்து ரசிகர்கள் அவருக்கும் குழுவுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷின் கைவசம் சில படங்கள் உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்' ரஜின்காந்துடன் ‘அண்ணாத்த', மோகன்லாலுடன் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', மிஸ் இந்தியா' மற்றும் ‘ரங் தே' ஆகிய படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார். கீர்த்தியின் ‘பென்குயின்' திரைப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் நேரடியாக் வெளியானது. மேலும், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com