முகப்புடோலிவுட்

இணையத்தை மிரட்டும் 'குருஷோத்திரா' டிரெய்லர்; முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் பிரபலங்கள்!

  | July 08, 2019 15:16 IST
Kurukshetra

துனுக்குகள்

 • கன்னட இயக்குநர் நாகன்னா இந்த படத்தை இயக்கி இருக்கிறார்
 • ஹரிகிருஷ்ணா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
 • முனிரர்னா இப்படத்தை தயாரித்திருக்கிறார்
புராணக்கதையான மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய 'குருஷோத்திரா' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் கர்ணனாகவும் நடிகை ஸ்னேகா திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com