முகப்புடோலிவுட்

சூப்பர் ஸ்டாருக்கு மெழுகு சிலை…!

  | March 26, 2019 11:57 IST
Mahesh Babu

துனுக்குகள்

 • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார் இவர்
 • தமிழில் ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார்
 • இவருக்கு சிங்கப்பூரில் மெழுகுசிலை வைத்துள்ளனர்
தெலுங்கு சூப்பர்ஸ்டாராக அறியப்படுபவர் மகேஷ்பாபு. இவர் தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் இவருக்கு ஜோடியாக நடித்திந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  சிங்கப்பூரில் உள்ள அவரது ரசிகர்கள் அவரை கவுரவப்படுத்தும் விதமாக Madame Tussauds சார்பாக அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளனர்.
 
அந்த சிலை நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டும் அது மகேஷ் பாபு நடத்திவரும் AMB சினிமாஸ் மல்டிபிளக்ஸில் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அது சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படும்.
 
இதனைக் கண்ட மகேஷ் பாபு, தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com