முகப்புடோலிவுட்

மகேஷ் பாபுவின் 25-வது பட ஃபர்ஸ்ட் லுக் டீசர்

  | August 09, 2018 10:55 IST
Maharshi Movie

துனுக்குகள்

 • இது மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம்
 • இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்
 • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
டோலிவுட்டில் கொரட்டால சிவாவின் ‘பரத் அனே நேனு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷ் பாபு, ‘தோழா’ புகழ் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடத்தில் அல்லரி நரேஷ் நடிக்கிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - வைஜெயந்தி மூவீஸ் – PVP சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
 

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘மகர்ஷி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மகேஷ் பாபுவே ட்வீட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, தனது பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரையும் ஷேரிட்டுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com