முகப்புடோலிவுட்

'ஆச்சார்யா' படத்திலிருந்து விலகிய த்ரிஷா; காரணத்தை மறுத்த 'மெகா ஸ்டார்'

  | April 10, 2020 14:32 IST
Chiranjeevi

நக்சலிசம் பின்னணியுடன் கூடிய அதிரடி-பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஆச்சார்யா’வை ராம் சரண் தயாரிக்கிறார்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது பான் இந்தியன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திற்கு பிறகு, கோரட்டலா சிவா இயக்கத்தில் தனது அடுத்த மெகா திட்டமான 'ஆச்சார்யா' படத்தில் நடிக்கவுள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றுநோய் அபாயம் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

இப்படத்தில், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா கையெழுத்திட்டார், ஆனால் சில வாரங்களுக்கு முன்பு படக்குழுவுடனான படைப்பு வேறுபாடுகளை சுட்டிக்காட்டி படத்திலிருந்து வெளியேறினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சில நேரங்களில் விஷயங்கள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து வித்தியாசமாக மாறும். படைப்பு வேறுபாடுகள் காரணமாக, சிரஞ்சீவி சார் படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. அணிக்கு நல்வாழ்த்துக்கள். எனது அருமையான தெலுங்கு பார்வையாளர்களுக்கு- ஒரு அற்புதமான திட்டத்தில் விரைவில் உங்களைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன், ”என்று கூறியிருந்தார். அதையடுத்து அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் அந்த வேடத்தில் ஒப்பந்தமானார்.

இந்நிலையில், சிரஞ்சீவி தனது சமீபத்திய பத்திரிகை உரையாடலில் த்ரிஷாவின் வெளியேறுதல் குறித்து கூறியுள்ளார். அவர் “எனது அணியிடம், த்ரிஷா கிருஷ்ணாவுடன் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று கேட்டேன். என் மகள் சுஷ்மிதா தனது ஆடைகளுடன் தயாராக இருந்தார். பின்னர் அவர் வெளியேறுவது குறித்த செய்தியைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அவர் மணி ரத்னத்தின் திட்டத்தில் கையெழுத்திட்டார் மற்றும் திட்டத்திற்காக மொத்த தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்பது எனக்குத் தெரியவந்தது. எனவே, அவர் எனது ஆச்சார்யா திரைப்படத்திலிருந்து வெளியேறினார். ஆச்சார்யாவின் அணியைச் சேர்ந்த எவருக்கும் த்ரிஷா கிருஷ்ணனுடன் ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

நக்சலிசம் பின்னணியுடன் கூடிய அதிரடி-பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஆச்சார்யா'வை ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி அதில், 30 வயதான கோவிந்த் மற்றும் ஒரு நடுத்தர வயது ஆச்சார்யா என இரண்டு வெவ்வேறு அவதாரங்களில் காணப்படுவார். மணி சர்மா இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com