முகப்புடோலிவுட்

ஒடிசா பெண் காவல் ஆய்வாளரின் தாயுள்ளத்தை பாராட்டிய ‘மெகா ஸ்டார்’.. வைரலாகும் வீடியோ கால்..!

  | May 13, 2020 10:44 IST
Chiranjeevi

அதையடுத்து அவர், ஒடிசாவைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளரான சுபஶ்ரீ உடன் தான் பேசிய வீடியோ காலை பதிவிட்டார்.

டோலிவுட் ‘மெகா ஸ்டார்' நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில்  மே 10-ஆம் தேதி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி, மனநிலை பாதிக்கப்பட ஒரு வயதான பெண்ணுக்கு உணவு ஊட்டுவிட்ட வீடியோவைக் கண்டதாக தெரிவித்தார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மேலும், ஒரு பெண்ணின் தாய்மை உள்ளுணர்வு என்பது அக்கறை காட்டுதல், அன்பு காட்டுதல் மற்றும் உணவளித்தல் என்பதாகும் என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.

மேலும், அந்த துணிச்சலான பெண் காவல்துறை அதிகாரியுடன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகக் கூறிய சிரஞ்சீவி, அந்த வீடியோவை தனது அடுத்த பதிவில் வெளியிடுவதாகக் கூறினார். மேலும், எந்த ஏழை மக்களும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதையடுத்து அவர், ஒடிசாவைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளரான சுபஶ்ரீ உடன் தான் பேசிய வீடியோ காலை பதிவிட்டார்.

பணி முன்னணியில், தென்னிந்திய ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தனது பான் இந்தியன் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திற்கு பிறகு, கோரட்டலா சிவா இயக்கத்தில் தனது அடுத்த மெகா திட்டமான 'ஆச்சார்யா' படத்தில் நடிக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் அபாயம் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

இப்படத்தில், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா கையெழுத்திட்டார், ஆனால் சில வாரங்களுக்கு முன்பு படக்குழுவுடனான படைப்பு வேறுபாடுகளை சுட்டிக்காட்டி படத்திலிருந்து வெளியேறினார். அதையடுத்து அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் அந்த வேடத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com