முகப்புடோலிவுட்

புதிய துறவி தோற்றத்தின் ரகசியத்தை உடைத்த சிரஞ்சீவி.!!

  | September 16, 2020 11:25 IST
Mega Star

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது புதிய புகைப்படத்துடன் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானார். 

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது புதிய புகைப்படத்துடன் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானார். புகைப்படத்தில், சிரஞ்சீவி மொட்டைத் தலையுடன் காணப்பட்டார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்த மெகா ஸ்டார் ““#UrbanMonk ஒரு துறவியைப் போல நான் சிந்திக்க முடியுமா” என்று பதிவிட்டிருந்தார்.

#UrbanMonk Can I think like a monk?

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

இந்த புகைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்தது, மேலும் அவரது மகனும் டோலிவுட் ஸ்டார் ராம் சரணும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கமண்ட் செய்திருந்தார். அவர் “அப்பா!!! நான் இப்போது என்ன பார்த்தேன்???” என ஆச்சரியமாக பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் வைரலாகி, மெகா ஸ்டாரின் வரவிருக்கும் படத்திற்கான புதிய தோற்றமா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ள நிலையில், இப்போது இறுதியாக அந்த மொட்டைக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவரது ஒப்பனை கலைஞர்கள் சிரஞ்சீவியை ஒரு துறவி போல் மாற்றுவதைக் காண முடிந்தது. வீடியோவைப் பகிர்ந்த சிரஞ்சீவி, “எந்தவொரு தோற்றத்தையும் நம்பக்கூடியதாக மாற்றக்கூடிய தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவின் மந்திரத்திற்கு வணக்கம்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது அவரது ரசிகர்களால் அனைத்து தளங்களிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com