முகப்புடோலிவுட்

கன்னட நடிகர் சிவராஜ்குமாரை இயக்குகிறாரா `குட்டிப்புலி' முத்தையா?

  | September 05, 2018 11:37 IST
Director Muthaiah

துனுக்குகள்

  • ‘குட்டிப் புலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா
  • ‘தேவராட்டம்’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • கன்னட படமான இதில் கதாநாயகனாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளாராம்
தமிழ் சினிமாவில் சசிகுமாரின் ‘குட்டிப் புலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. இதனையடுத்து கார்த்தியின் ‘கொம்பன்’, விஷாலின் ‘மருது’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய 3 படங்களை இயக்கினார். தற்போது, இயக்குநர் முத்தையா இயக்கி வரும் புதிய படம் 'தேவராட்டம்'.

இந்த படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' புகழ் மஞ்சிமா மோகன் டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க சூரி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தை இயக்க முத்தையா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட படமான இதில் கதாநாயகனாக சிவராஜ்குமார் நடிக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். வெகு விரைவில் இந்த படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்