முகப்புடோலிவுட்

‘பவர் ஸ்டார்’ பிறந்தநாளில் வெளியாகும் அடுத்தப் பட அப்டேட்.! பவன் ரசிகர்கள் உற்சாகம்..

  | August 31, 2020 23:29 IST
Pawan Kalyaan

இதற்கிடையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வக்கீல் சாப் படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் ஹரிஷ் சங்கருடன் கைகோர்க்கவுள்ளார் என்பது தெரியவந்தது. இப்போது, படத்தின் தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பவர் ஸ்டாரின் பிறந்தநாளான செப்டம்பர் 2-ஆம் தேதி படம் குறித்த அப்டேட் வெளியிடப்படும் என்று ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ட்வீட் பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

செய்தியை வெளிப்படுத்திய தயாரிப்பாளர்கள் ட்விட்டரில், “எஸ்ஸ்ஸ்ஸ்! நீங்கள் தேடும் புதுப்பிப்பு இங்கே! செப்டம்பர் 2, மாலை 4:05 மணிக்கு” எனப் பதிவிட்டுள்ளனர்.

இயக்குனர் கிரிஷ் மற்றும் கே.எஸ். ரவீந்திரா ஆகியோருடன் பவன் கல்யாள் தன் கைவசம் மேலும் இரண்டு படங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளில் அந்த திரைப்படங்கள் குறித்த புதுப்பிப்புகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவன் கல்யாண் இப்போது ‘வக்கீல் சாப்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். பாலிவுட்டில் தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘Pink'ன் தெலுங்கு ரீமேக்கான இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோர் இந்த படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்று கூறப்படுகின்றன.

இதற்கிடையில், ‘அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. மேலும் இதில் விஜய் சேதுபதியும் இணயவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com