முகப்புடோலிவுட்

நாகர்ஜுனா-ரகுல் ப்ரீத் சிங் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

  | March 26, 2019 18:03 IST
Nagarjuna

துனுக்குகள்

 • 2002ஆம் ஆண்டு மன்மதுடு வெளியானது
 • இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்
 • இப்படத்தை ராகுல் ரவீந்த்ரன் இயக்குகிறார்
தெலுங்கில் ‘சி லா சௌ' என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் ராகுல் ரவீந்திரன் . ‘வணக்கம் சென்னை', ‘யூ டர்ன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ராகுல் ரவீந்திரன். இவர் பின்னணி பாடகி சின்மயியின் கணவர். ஏற்கெனவே 2002-ம் ஆண்டு நாகர்ஜுனா - சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியான ‘மன்மதுடு' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இவர் இயக்குகிறார்.

நாகர்ஜுனா மீண்டும் நாயகனாக நடிக்க, ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக  இப்படத்தில் நடிக்கிறார். இன்று  இப்படத்தின் பூஜையுடன் பட வேலைகள் துவங்கியுள்ளன. நாகர்ஜுனா மற்றும் பி.கிரண் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
‘ஆர்.எக்ஸ் 100' பட இசையமைப்பாளர் சைத்தன் பரத்வாஜ் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். லக்‌ஷ்மி, வெண்ணெலா கிஷோர், நாசர், தேவதர்ஷினி உள்ளிட்டவர்களும் இப்படத்தில்  நடிக்கின்றனர்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com