முகப்புடோலிவுட்

‘கேங் லீடர்’ படம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட நானி!

  | July 15, 2019 11:49 IST
Gang Leader

துனுக்குகள்

 • ஜெர்சி படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்
 • மைதிரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது
 • தமிழில் முதல் முறையாக நானி நடித்த படம் "நான் ஈ"
ஜெர்சி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் நானி அடுத்து நடித்து வரும் படம் ‘கேங் லீடர்'. இந்த படத்தை விக்ரம் கே குமார் இயக்க ஜெர்சி படத்திற்கு இசை அமைத்த அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ந் தேதியும், முதல் பாடல் ஜூலை 18ந் தேதியும், டீசர் ஜூலை 24ந் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
 
‘நான் ஈ' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நன்கு அறிமுகமானவர் நானி. தெலுங்கு திரையுலகில் கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நானி, ‘கேங் லீடர்' படத்தின் மூலம் அதிகம் கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பாக பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார். கேங் லீடர் என்றது இது ஒரு கேங்ஸ்டர் மூவி என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இது நண்பர்களை பற்றிய கதை என நெருங்கிய வட்டாரங்கள தெரிவிக்கின்றன. இதனால் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com