முகப்புடோலிவுட்

‘ராட்சசன்’ படத்தின் ரீமேக்கில் நித்தின்

  | December 17, 2018 11:57 IST
Ratsasan

துனுக்குகள்

  • ‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்
  • இந்த படம் கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை சுதீர் வர்மா இயக்கவுள்ளாராம்
கோலிவுட்டில் விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன்'. ராம்குமார் இயக்கியிருந்த இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

‘கிரிஸ்டோபர்' எனும் மிரட்டலான வில்லன் வேடத்தில் சரவணன் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக நித்தின் நடிக்கவுள்ளார். இதனை இயக்குநர் சுதீர் வர்மா இயக்கவுள்ளாராம். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்