முகப்புடோலிவுட்

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் நித்யா மேனன்..?

  | April 15, 2019 17:36 IST
Nithya Menen

துனுக்குகள்

 • இப்படத்தை ராஜமௌலி இயக்குகிறார்
 • இப்படத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்
 • ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்
பாகுபலி என்கிற பிரம்மாண்ட படைப்பைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ஆலியாபட், டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள்.  ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை படக்குழு தேடி வருகின்றனர்.
 
நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை படக்குழ  உறுதி செய்யவில்லை.
 
வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com