முகப்புடோலிவுட்

ஒரே நாளில் 3 படங்களின் அப்டேட்; ‘பவர் ஸ்டார்’ பர்த்டே ஸ்பெஷல்..

  | September 02, 2020 15:59 IST
Power Star Pawan Kalyan

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

டோலிவுட்டின் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் தனது 49-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு, பவன் கல்யாண் பிறந்த நாள் அவரது வரவிருக்கும் 3 திரைப்படங்களின் சுவையான அப்டேட்களுடன் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு படத்தின் அப்டேட்டிலிருந்தும் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இது மூன்று வெவ்வேறு குறிப்பிட்ட நேரங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

வக்கீல் சாப்: பாலிவுட் ஹிட் ‘பிங்க்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்' படத்தின் மோஷன் போஸ்டர் காலை 9.09 மணிக்கு தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்படும். எஸ்.எஸ்.தமன் அதை ட்விட்டரில் வெளியிடுவார். அதற்கான பின்னணி இசை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ் ஜகர்லாமுடியின் படம்: இப்படம் குறித்த புதுப்பிப்பு மதியம் 12.30 மணிக்கு வெளியாகும். நவீன காலத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கால நாடகத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக்கப்படும் என்று வதந்தி பரவியுள்ளது.

ஹரிஷ் சங்கரின் படம்: இந்த படம் குறித்த புதுப்பிப்பு மாலை 4:05 மணிக்கு வெளியிடப்படும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்படும். அநேகமாக இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com